நானும் கூட, நானும் கூட எண்டு Blog தொடங்கியாச்சு எதாவது எழுதுவம் எண்டு தட்டினா தமிங்கிலிஷ்ல எல்லோ வருகுது!
உங்களுக்கு தெரியும் தானே, எல்லாரும் ஏறினம் எண்டு தானே நானும் சக்கடத்தார் ஆனனான். நானென்ன முன்ன பின்ன இதுகளகண்டனானே?
சரி அத விடுவம் நான் என்ன சொல்லவந்தானான் எண்டா, இண்டைக்கு இஞ்ச பஸ் வர்ற கதைதான் பாருங்கோ ஹாட் டொபிக், மத்தியானம்போல உந்த நியூஸ் அலெர்ட் வந்துது பாருங்கோ ,உங்க ரோடில காணுறவை அரைவாசிபேரும் எப்ப ஊருக்கு போறியள்? பஸ் வருகுதாம், வந்திட்டுதாம், இதுதான் கதை போதாததுக்கு இஞ்ச இருந்து கோல் எடுத்து உலகளாவியரீதிலையும் பாதை துறந்தாச்சு எண்ட கதைதான், தெரியும் தானே இஞ்ச இருந்து 2 ரூபாயோட உலகத்தயே உண்டு இல்லையெண்டு ஆக்கலாம். பாதை துறந்தாச்சு இந்தமுறை நல்லூர் திருவிழாக்கு இஞ்ச இருந்து வான் பிடிச்சு போறதெண்டும் கொஞ்ச பெடியள் நிண்டு கதச்சுகொண்டிருந்தாங்கள். எனக்கு சில விஷயங்கள் விளங்கேல்ல பாருங்கோ! அப்ப இவளவு நாளும் இஞ்ச என்ன நடந்தது? இப்ப இப்பிடி கதைக்கிறவை தானே கொஞ்ச நாளைக்கு முன்ன வேற மாதிரியெல்லாம் கதைச்சுக்கொண்டு திரிஞ்சவை. இவயள்தானே முந்தி வீர பிரதாபங்கள் கதைச்சு ஆனை வருகுது, பூனை வருகுது எண்டுகொண்டு திரிஞ்சவை!? இப்ப இவைக்கு என்ன நடந்திட்டுது? காலத்துக்கு ஏத்த மாதிரி மாறினமாக்கும் என்ன? மாறட்டும் மாறட்டும் மாற்றங்கள் நல்லதுதானே! ஆனா என்ன, பிறகு ஆரும் வந்து வேற ஏதும் சொன்னா அதுக்கும் மாறிடிவினம் காலம் காலமா அப்பிடிதானே. சரி... சரி... எனக்கும் மெல்லமா ஊருக்கு போற ஆசை வந்திட்டுதுபாருங்கோ. வான் பிடிச்சு போறதோ இல்லாட்டி சொகுசு பஸ்சில போறதோ எண்டுதான் இன்னும் முடிவேடுகேல்ல.
அப்ப நீங்கள் எப்ப ஊருக்கு போறியள்?