பதிவை தொடங்கினதோட அண்டைக்கு எழுதிட்டு அப்பிடியே விட்டு போட்டன் என்ன நடந்ததெண்டா நாங்கெல்லாம் எழுதினா பாருங்கோ பாருங்கோ எண்டு கூவி கூவி சொன்னாலும் ஆர் பாக்க போயினம் ஊரில இருக்கிற பாசக்கார பயலுவளுக்கெல்லாம் சொல்லி அவங்கள் பாத்திட்டு சொல்லாம கொள்ளாம மொபைல ஓப் பண்ணிவச்சிட்டு இருக்கேக்கையே யோசிச்சிருக்கோணும் அதுக்கு பிறகும் ஆயிரத்தெட்டு கோல் அடிச்சு கரைச்சல் தாங்கேலாம "மச்சான் அந்தமாதிரி எழுதிஇருக்கிறாய்" எண்டு சொன்னாலும், கதைய குறைக்கேக்கயாவது யோசிச்சிருக்கோணும் அப்பவும் ஒண்டும் விளங்கேல்ல பிறகு வழமை போல ரெண்டு ரூவாய் கோலடிக்க சொந்தம் பாத்திட்டு சொல்லிச்சுது "அரசியல் கதைக்காதஎண்டு". எங்கிட மாதகல் சங்கமித்தை அம்மன் ஆணையா நான் அரசியல் கதைக்கேல்ல. இங்க இருந்து உதெல்லாம் கதைக்க ஒற்றை பனைக்கென்ன விசரே?. ஆனான பட்ட எத்தினையோ பேர் கூடி கும்மியடிச்சு எழுதெழுதெண்டு எழுதி கிழிச்சு குப்பையாக்கி , அள்ளி அதில கூழ்காச்சி குடிச்சு இன்னும் என்னன்னவோ எல்லாம் செய்ய இருக்கினம், அதுக்க இந்த நாய்க்கேன் போர் தேங்காய்? பிறகு சங்கமித்த அம்மன் கண்ணை குத்தி போடுமெல்லே.
Tuesday, August 11, 2009
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment