உனக்கில்லையடி இது ஊருக்குதான்

எதைக் கண்டு ஒரு மனிதனுக்கு சிரிப்பு வருகிறதென்று கவனி. அவன் எப்படிப்பட்டவனென்று மிக நன்றாகத் தெரிந்து கொண்டு விடலாம். - கெதே

Saturday, August 29, 2009

எங்களிட்ட எதில்லாட்டியும் அதிருக்கு....








ஆ…. எப்பிடி இருக்கிறியள் எல்லாரும்? ஏதோ நல்லா இல்லை எண்டு சொன்னா மருந்து தாற டாக்குத்தர் மாதிரி உதொரு கேள்வி இவனுக்கு எண்டு நைக்கிறியளே? ஒற்றைப்பனை என்ன டாக்குத்தருக்கு படிச்சுப்போட்டே சுகம் விசாரிக்குது. மழைக்கும் பள்ளிக்கூடத்துப்பக்கம் ஒதுங்காததுதானே இது. நானேன் கேட்டநானெண்டா இப்பதானே டெங்கு எண்டீனம் பண்டிக்காச்சல் எண்டீனம் உந்த வியாதியள்ள ஏதும் எங்களுக்கும் வந்திடுமோ எண்ட பயம்தான். ஏனெண்டா பாருங்கோ 2011 இல சனத்தொகை கணக்கெடுக்க போயினமாம் நாங்கள் தான் ஏற்கனவே எக்கச்சக்கமா குறைஞ்சு போய்க்கிடக்கிறம் அதுக்குள்ள இதுகளும் வந்திட்டுதெண்டா அதால எல்லாரும் கவனமா இருங்கோ என்ன!

இப்பிடித்தான் கிட்டடீல பள்ளிக்கூட பெடி ஒண்டோட கதைச்சுக்கொண்டிருக்கேக்க படிப்பைப்பற்றி கதைவந்திட்டுது. முந்தி எங்கிட சனம் நெஞ்ச நிமித்துற முதல் விசயமுதெல்லே. எதில்லாட்டியும் எங்களிட்ட படிப்பிருக்கெண்டு தானே அதையும் புடுங்க…. வேண்டாம் உது கதை வேறயெங்கயோ போகுது… பின்னபாருங்கோ பெடீற்ற ஏன்ராப்பா எப்பபாத்தாலும் உந்த இன்ரனெட் கேம்ஸ் இல்லாட்டி லிட்டில் ஏசியா பஸ் ஸ்டான்ட் எண்டு சுத்திக்கொண்டே இருக்கிறா அப்ப என்ன இரவிரவா நித்திரை முழிச்சு படிக்கிறியோ எண்டு கேக்க அவனொரு சிரிப்பு சிரிச்சான் பாருங்கோ அதுக்கு அர்த்தம் விஜய் சொன்ன மாதிரி எந்த Dictionary லும் இல்லை. ஏன்ராப்பா சிரிக்கிறா எண்டு நான் கேக்க போன ஞாயிற்றுக்கிழமை பேப்பரை தூக்கி போட்டுட்டு ஒரு வசனமொண்டு சொன்னான் பாருங்கோ. எங்கிட தமிழ்பட நடிகர்மார் தோத்து போவினம்! அப்பிடி என்ன வசனமெண்டு கேக்குறியளே? “நாங்க ஃபெயிலானாலும் டிகிரி வாங்கிடுவம்ல”
இவன் மட்டுமில்ல இவனை மாதிரி கனக்க பெடிபெட்டயள் உந்த விளம்பரங்கள பாத்திட்டு உப்பிடித்தான் ஒரு மார்க்கமா திரியுதுகள். உதென்ன உது புதுசில்லெடுப்பா இருக்கேயெண்டு உந்த “நீங்கள் A/L மற்றும் O/L தரத்தில் சித்தி பெறவில்லையா கவலை வேண்டாம எங்களி;டம் வாருங்கள்” எண்ட விளம்பரங்கள் வந்த பேப்பரையும் தூக்கிக் கொண்டு அதைப்பற்றி விசாரிப்பமெண்டு வெளிக்கிட்டன். என்னது? நானேனோ???? நானும் ஒரு சேர்டிபிக்கட்ட தேடிப்போடுவம் எண்டுதான். ஆனா போன வேகத்திலயே திரும்பிவந்திட்டன் பின்ன நூறுகளுக்கும் ஆயிரங்களுக்கும் சிங்கியடிக்கிற என்தரவளி லச்சங்களுக்கு ஆற்றவீட்ட போறது.

இதொரு கூத்தெண்டா இங்க இன்னொரு கூத்து "ஓடியா ஓடியா விசா எடுத்துத்தாறன் ஓடியா" எண்டுறது. ஏதோ தாங்கள் தான் விசா Officers மாதிரி கூவுற இன்னொரு கூட்டமும் இஞ்சினேக்க திரியுது. என்ன உவை செய்யினம் எண்டு விசாரிச்சா Form நிரப்பிக்குடுக்கினமாம் அதுக்கு வேண்டுற காசு 50,000 மாம். விசாக்கிடைச்சா மிச்சம் குடுக்கோணுமாம். கவனிச்சீங்களே விசா கிடைச்சா. அப்ப நம்பிக்கை இல்லாம தானே அனுப்பீனம். இதில உந்த படிச்ச கெட்டிக்கார பிள்ளையளும் தங்கிட சேர்ட்டிபிக்கற்றுகளோட இந்த கூட்ங்களுக்கு பின்னுக்கு திரியிறத பாக்கேக்கதான் வயித்தப்பத்தி எரியுது பாருங்கோ. ஏனெண்டா எங்களுக்கு எதில்லாட்டியும் படிப்பிருக்கு அதுக்காக நாங்க எதுவும் செய்வம் எண்டதாலதானே இப்பிடியெல்லாம் ஏமாத்திற கூட்டமும் புதுசு புதுசா முளைக்குது.

சரி வேற என்ன எனக்கு பட்டதை நான் சொல்லிப்போட்டன். நீங்கள் உங்களுக்கு ப்பதை சொல்லுங்கோவன்.

சரி அப்ப நான் வாறன் என்ன......



No comments:

Post a Comment