உனக்கில்லையடி இது ஊருக்குதான்

எதைக் கண்டு ஒரு மனிதனுக்கு சிரிப்பு வருகிறதென்று கவனி. அவன் எப்படிப்பட்டவனென்று மிக நன்றாகத் தெரிந்து கொண்டு விடலாம். - கெதே

Wednesday, August 26, 2009

அரோகரா……….. பாவம் நம் கடவுளர்கள்



தலை நகரில மாசம் ஒரு தேர் எண்டான்ன இழுத்துப் போடோணும் எண்டது இப்ப ஒரு வேண்டுதல் இல்லாத வேண்டுதல் பாருங்கோ, ஒரு சாரார் மட்டுந்தான் தேர் இழுத்து உழைக்கிறதோ எண்டு ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு பக்கத்தால இழுக்கினம்.
நல்லா நடக்குது பாருங்கோ பாண்டு வாத்தியமும், பைலா நாட்டியமுமா கடவுளர்களுக்கு ஊர்வலம் பாவம் அவைக்குத்தான் ஊருலகத்தில என்ன நடக்குதெண்டு தெரியாம ஏறிக்குந்திக்கொண்டு அவையும் வெளிக்கிட்டிட்டீனம்.
எங்களுக்கென்ன எத்தினபேர் வந்தாலும் அரிச்சினைத்தட்டும், அள்ளிப் பணமும் குடுக்கிறது குடுக்குறதுதான் இதில எத்தின தாலிக்கொடி எத்தின சங்கிலி அறுபட்டதெண்டது அவருக்குத்தான் வெளிச்சம்பாருங்கோ. கடவுளச் சாட்டி எல்லாரும் உழைக்கேக்க கள்ளரும் பாவம் தானே. எனக்கொண்டு விளங்கேல்லப் பாருங்கோ அதேன் எல்லாக் கடவுளரும் வெள்ளவத்தைய மட்டுந்தான் சுத்தி சுத்தி வருகினம். நானென்னத்த சொல்லுறது நீங்களே பாருங்கோவன்.

No comments:

Post a Comment